இஸ்ரேலின் அச்சுறுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது ; ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர்
மேற்குக் கரையை இணைப்பதற்கான இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள் "ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் லானா நுஸ்ஸெய்பே (Lana Nusseibeh) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
காசாவில் உடனடி போர்நிறுத்தம்
பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் குறிவைத்து, அவர்களை முற்றுகையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.
மக்களைப் பட்டினிக்கு உள்ளாக்கி, வலுக்கட்டாயமாக இடம்பெயர்வதை எதுவும் நியாயப்படுத்த முடியாது என்று அவர் கூறினார். மேற்குக் கரையை இணைப்பதற்கான அச்சுறுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அதனை மன்னிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் ஏனைய நாடுகளின் ஆதரவுகளையும் நிலைப்பாடுகளையும் அமைச்சர் லானா நுஸ்ஸெய்பே வரவேற்றார்.
காசாவில் உடனடி போர்நிறுத்தம், இஸ்ரேலிய கைதிகள் மற்றும் பலஸ்தீன கைதிகளை விடுவித்தல் மற்றும் அவசர உதவி வழங்குதல் ஆகியவற்றுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.