கனடாவில் கார்பன் வெளியீட்டு அளவில் வீழ்ச்சி
கனடாவில் கார்பன் வெளியீட்டு அளவில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டில் இவ்வாறு கார்பன் வெளியீட்டு அளவு வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த 2023ம் ஆண்டில் கார்பன் வெளியீடு ஒரு வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
சனத்தொகை அதிகரிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகளுக்கு மத்தியில் இவ்வாறு கார்பன் வெளியீட்டு அளவு வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் சுமார் 694 மெகாடொன் எடையுடைய கார்பன் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இது 2022ம் ஆண்டை விடவும் 6 மெகாடொன் குறைவானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது சுமார் 8.5 வீதம் கார்பன் வெளியீடு குறைவடைந்துள்ளது.
கடந்த ஆண்டின் கார்பன் வெளியீடு குறித்த துல்லியமான மதிப்பீடுகள் எதிர்வரும் 2025ம் ஆண்டில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.