ட்ரம்பால் நிராகரிக்கப்பட்ட போர் நிறுத்தம் ; ஈரான் கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் சமீபத்திய சமாதான முன்மொழிவை "ஏற்க முடியாதது" என நிராகரித்த போதிலும், பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை மேசையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களிடம தெரிவித்துள்ளார்.

மறுபுறம், நிலவும் போர் நிறுத்த உடன்படிக்கை ஊசலாடிக்கொண்டிருக்கும் நிலையில், ஈரான் தனது இராணுவ நிலைப்பாடு குறித்து கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்தநிலையில், ஈரானிய இராணுவம் "மிக உயர்ந்த தயார் நிலையில்" உள்ளதாகவும், தற்போதைய சூழலில் "பின்னவாங்குவதற்கு இடமே இல்லை" என்றும் ஈரானிய பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமி நியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான போர் நிறுத்த உடன்படிக்கை தற்போது ஒரு நிலையற்ற சூழலில் உள்ளதாகக் கூறப்படும் நிலையிலேயே இந்த இருதரப்புக்கருத்துக்கள் வெளியாகியுள்ளன