சிகரெட் புகைத்துக்கொண்டே மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்ற முதியவர்
சீனாவில் மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்ற ஒருவர் வழி நெடுகே சிகரெட் புகைத்துகொண்டே போட்டியில் கலந்துகொண்ட தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக 26 மைல்கள் தொலைவு கொண்ட மாரத்தான் பந்தயம் என்பது கட்டுக்கோப்பான வீரர்களால் மட்டுமே சாத்தியம். ஆனால் சீனாவில் Uncle Chen என்ற 50 வயது நபர், இந்த 26 மைல்கள் தொலைவில் மொத்தம் 42 சிகரெட்டுகள் புகைத்துள்ளார்.
1,500 வீரர்கள் பங்கேற்ற இந்த மாரத்தான் பந்தயத்தில் 574வது வீரராக நிறைவு செய்துள்ளார். 3.28 மணி நேரம் எடுத்துக் கொண்ட Uncle Chen, வழி நெடுக புகைத்தபடியே போட்டியில் பங்கேற்றுள்ளார்.
ஆனால், Uncle Chen இவ்வாறு புகைத்தபடியே போட்டிகளில் பங்கேற்பது இது முதன்முறை இல்லையாம். கடந்த 5 ஆண்டுகளாகவே Guangzhou மற்றும் Xiamen பகுதிகளில் மாரத்தான் பந்தயங்களில் இவர் தவறாமல் பங்கேற்று வருகிறாராம்.
மேலும், சீனாவில் ஒட்டத்தில் பங்கேற்கும் வீரர்கள் புகைக்க தடை ஏதும் சீன நிர்வாகம் விதிக்கவில்லை என்பதால், Uncle Chen தமது பழக்கத்தை தொடர்கிறார் என்கிறார்கள் சமூக ஊடக பயனர்கள்.