சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய சிக்கன் டிக்கா சாக்லெட்!
சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டும் வீடியோக்களில் சில நல்ல வரவேற்பையும், சில வீடியோக்கள் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ பயனர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த வீடியோவில் ஒருவர் தனது கையில் சாக்லெட்டை காட்டுகிறார். அந்த சாக்லெட்டுக்குள் சில கிரீம்களை ஊற்றும் அவர் அதற்கு மேல் சிக்கன் டிக்கா மசாலாவை வைக்கிறார்.
பின்னர் அதற்கு மேல் மீண்டும் சாக்லெட்டை வைத்து ப்ரீஸ் செய்தவுடன் பிரித்து பார்த்தால் சாக்லெட்டுக்கு நடுவில் சிக்கன் டிக்கா மசாலா இருக்கிறது.
துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த சாக்லெட் சிக்கன் மசாலா விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
பஞ்சாப்பை சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த சிக்கன் டிக்கா மசாலா விற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.