அமெரிக்க சபாநாயகர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த சீனா
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தால் கடும் கோபம் கொண்ட சீனா அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பொருளாதரத் தடை விதித்துள்ளது.
சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுகிறது என்றும் நான்சி பெலோசியின் பயணம் தங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அவமதிக்கிறது என்றும் சீன வெளியுறவுத் துறை தெரிவித்தது.
இதனிடையே, பெலோசியின் வருகையை அடுத்து தைவானின் 6 எல்லைப் பகுதிகளையும் சீனாவின் முப்படைகளும் சுற்றி வளைத்தன. மட்டுமின்றி தைவானின் எல்லைப் பகுதியில் சீனா போர் ஒத்திகையை தொடங்கியது.
இந்த நிலையில் தைவானின் எல்லையைச் சுற்றி சீனாவின் 100 போர் விமானங்கள் மற்றும் 10 போர்க் கப்பல்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதை சீனா அறிவித்துள்ளதுடன், ஞாயிறு வரையில் போர் ஒத்திகை முன்னெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதனால், இரு நாடுகளிடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. தைவானின் பாதுகாப்புக்காக அமெரிக்க போர்க் கப்பலுகளும் தைவானின் கடற்பகுதியில் அனுப்பிவைக்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.