அமெரிக்க கடற்படையில் ஊடுருவ முயற்சித்த சீன உளவாளிகள் கைது
அமெரிக்காவின் இராணுவ இரகசியங்களையும், தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியத் தகவல்களையும் திருடுவதற்காக சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
இதற்காக, தங்களது அரசு உளவாளிகளைப் பயன்படுத்தி, அமெரிக்காவிலேயே வசிக்கும் நபர்களைத் தங்களுக்கு ஆதரவாகத் திரட்டி, அவர்களைத் தங்களது தகவலாளிகளாக மாற்றும் வேலையில் சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சரகம் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க புலனாய்வு அமைப்பு
அந்த வகையில், 2021ம் ஆண்டு, அமெரிக்காவில் சட்டபூர்வமாக வசித்துவந்த யுவான்ஸ் சென் என்பவரை, லிரென் லாய் என்ற சீன உளவாளி தங்கள் உளவு அமைப்புக்கு ஆள்சேர்த்துள்ளார்.
இந்த பின்னணியில், சீன உளவாளிகளின் செயல்பாடுகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பு தீவிரமாகக் கண்காணித்து வந்தது.
இந் நிலையில் யுவான்ஸ் சென் மற்றும் சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு வந்த லிரென் லாய் ஆகிய இரு சீன உளவாளிகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.