கனடாவில் சளிக் காய்ச்சலுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு
கனடாவில் சளிக் காய்ச்சல் மற்றும் இருமல் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக பிரதான மருந்தக நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
கேள்வி அதிகரிப்பு மற்றும் விநியோகச் சங்கிலி தடங்கள் என்பனவற்றின் காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளது.
அதிக எண்ணிக்கையிலானவர்கள் நோய்வாய்ப்பட்டதும், மருந்து வகைகள் உரிய முறையில் விநியோகம் செய்யப்படாமையே இவ்வாறு தட்டுப்பாடு ஏற்படக் காரணம் என ஒன்றாரியோ மருந்தக ஒன்றியத்தின் உறுப்பினர் ஜென் பெல்ச்சர் தெரிவித்துள்ளார்.
ஒன்றாரியோ மற்றும் ஏனைய மாகாணங்களின் மருந்தகங்களுக்கு சென்றால் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடாக இருப்பதனை நேரில் அவதானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருமல், சளி மருந்துகள் மட்டும் தட்டுப்பாடு கிடையாது எனவும் ஏனைய மருந்து வகைகளிலும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையும் இதற்கான ஓர் ஏதுவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர்களுக்கான வலி நிவாரணிகளுக்கும் கனடாவில் தட்டுப்பாட்டு நிலைமை நீடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.