பள்ளியில் சுருண்டு விழுந்து மரணமடைந்த 10 வயது மாணவி: அதிர்ச்சியில் குடும்பம்
பிரிட்டனில் 10 வயது பள்ளி மாணவி ஒருவர் திடீரென்று சுருண்டு விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் மொத்த குடும்பத்தினரையும் உலுக்கியுள்ளது.
கடந்த புதன்கிழமை சக மாணவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்திருந்த மாணவி பர்வீன் சாதிக், மதியத்திற்கு மேல் திடீரென்று சுருண்டு விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை பகல் மரணமடைந்துள்ளார்.
Wakefield பகுதியை சேர்ந்த 10 வயது மாணவி பர்வீன் சாதிக், சம்பவத்தின் போது ஆரோக்கியமாகவே இருந்துள்ளார். அவரது மரணம் மொத்த குடும்பத்தினரையும் உலுக்கியுள்ளதுடன், உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் மாணவி பர்வீன் சாதிக்கின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்டுள்ளனர்.
குடும்பத்தினர் தரப்பு தெரிவிக்கையில், சிறுமி பர்வீன் சாதிக் மூளை ரத்தக்கசிவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் முன்னர் அவர் மிகவும் ஆரோக்கியமாகவே இருந்துள்ளார் எனகவும் குறிப்பிட்டுள்ளனர்.