கனடாவில், நிறக்குருடால் பாதிக்கப்பட்டவருக்கு கிடைத்த வாய்ப்பு
கனடாவில் நிறக்குருட்டினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பணி வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிறக்குருடு குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கியூபெக் நகர தீயணைப்பு படையில் இணைந்து கொள்ள விணப்பம் செய்துள்ளார்.
அவரது குறைபாட்டை காரணம் காட்டி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. செபஷ்டியன் செம்சன் தில்போட் என்ற நபர் ஏற்கனவே தீயணைப்பு படையில் பணியாற்றியிருந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டில் கியூபெக் நகர தீயணைப்பு படையில் இணைந்து கொள்ள விண்ணப்பம் செய்திருந்தார்.
சிகப்பு மற்றும் பச்சை ஆகிய நிறங்களை பிரித்து அறிவதில் சிரமங்கள் காணப்படுவதாக அவர் தனக்கு வழங்கப்பட்ட வினாக்கொத்தில் பதிலளித்திருந்தார்.
தனது அனுபவம் காரணமாக இந்த தொழிலில் ஈடுபடுவதில் தடையில்லை எனத் தெரிவித்து மனித உரிமை தீர்ப்பாயத்தில் அவர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த தீர்ப்பாயம், குறித்த நபருக்கு கியூபெக் நகர நிர்வாகம் நட்டஈடாக 110000 டொலர்களை செலுத்த வேண்டுமெனவும், பணியில் இணைத்துக் கொள்ள வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.