மூன்றாவது நாளாக கடும் மோதல்; ரஸ்ய இராணுவத்தினர் பலர் கைது
ரஸ்யாவின் கேர்ஸ்க் பகுதிக்கு ஊருடுவியுள்ள உக்ரைன் படையினர் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஸ்ய படையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், இரஷ்ய இராணுவத்தினர் பலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேர்க்ஸ் பிராந்தியத்தில் 13 கிலோமீற்றர் உள்ளே உள்ள கிராமமொன்றை நோக்கி உக்ரைனிய படையினர் முன்னேறிச்செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னேறும் உக்ரைன் படை
கேர்க்ஸ் எல்லையிலிருந்து 13 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கொரெனெவோ என்ற பகுதியில் மோதல்கள் இடம்பெறுவதாக ரஸ்யாவின் புளொக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஸ்யாவிற்குள் ஆறுகிலோமீற்றர் தொலைவில் உள்ள சுட்ஜாவின் மேற்குபகுதி உக்ரேனிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேர்ஸ்க்கில் அவசர நிலைமையை ரஸ்யா அறிவித்துள்ளதுடன், அங்கிருந்த 3000க்கும் அதிகமான பொதுமக்கள்வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை திடீர் தாக்குதலை மேற்கொண்டு சுட்ஜாவினை கைப்பற்றிய உக்ரைன் படையினர் வடமேற்கு வடக்கு திசை நோக்கி முன்னேறியுள்ளனர்.
இந்நிலையில் சுட்ஜாவின் சோதனை சாவடியில் கைப்பற்றப்பட்ட ரஸ்ய படையினரை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.