இணையம் வாயிலாக கனேடிய இளம்பெண்ணைத் தொந்தரவு செய்த நபர்: அந்த பெண் எடுத்த துயர முடிவு
இணையம் வாயிலாக கனேடிய இளம்பெண்ணைத் தொந்தரவு செய்த நபர்: அந்த பெண் எடுத்த துயர முடிவு
தொடர்ச்சியாக அவளது ஆபாச வீடியோக்களைக் கேட்டு தொந்தரவு செய்த அந்த நபர் ஒரு கட்டத்தில் அவளது ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட, இந்த ஆள் கடைசி வரை நம்மை விடமாட்டான், நம்மால் அதைத் தடுக்க ஒன்றும் செய்யவும் முடியாது என முடிவு செய்த பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Amanda Todd என்னும் அந்த பதின்ம வயதுப் பெண், வாழ்க்கை துவங்கும் முன்னரே தற்கொலை செய்து வாழ்வை முடித்துக்கொண்டாள்.
Amandaவைத் தொந்தரவு செய்து வந்த நபர் நெதர்லாந்தைச் சேர்ந்த Aydin Coban என்பதைத் தெரிந்துகொண்ட பொலிசார், நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவருக்குத் தெரியாமல் அவரது வீட்டுக்குள் நுழைந்து கமெராக்கள் மற்றும் மைக்ரோபோன்களை மறைத்துவைத்துவிட்டு, அவருக்காக காத்திருந்தார்கள்.
Image - TELUS Originals
ஒருநாள் கையும் மெய்யுமாக சிக்கினார் Coban.
ஆனால், தான் Amandaவைத் தொந்தரவு செய்யவில்லை என்று கூறி, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் அவர்.
இந்த வழக்கு தொடர்ச்சியாக பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், Cobanகடைசி வரை நம்மை விடமாட்டார், நம்மால் அதைத் தடுக்க ஒன்றும் செய்யவும் முடியாது என முடிவு செய்த Amanda தற்கொலை செய்து வாழ்வை முடித்துக்கொண்டதாக நீதிமன்றத்தில் அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இணையம் எவ்வளவு ஆபத்தானது என்பது தெரியாமல் விளையாடும் இளம்பிள்ளைகளுக்கு Amandaவின் வாழ்க்கை ஒரு எச்சரிக்கை!
Image - B.C. Supreme Court