பிரான்ஸின் கடந்த 24 மணிநேர கொரோனா நிலவரம் இதோ!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 48,416 பேர் பாதிக்கப்பட்டதோடு 103 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸில் இதுவரை மொத்தமாக 77 இலட்சத்து 73 ஆயிரத்து 530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 19 ஆயிரத்து 330 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 5 இலட்சத்து 12 ஆயிரத்து 924 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 1,934 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரான்ஸில் 3,764 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 71 இலட்சத்து 41 ஆயிரத்து 276 பேர் குணமடைந்துள்ளனர்.