குளித்து முடித்த தண்ணீரை குடிக்க பயன்படுத்தும் தம்பதி: கூறிய காரணம்
இத்தாலிய தம்பதி ஒன்று தண்ணீருக்கான மாதக் கட்டணமாக வெறும் 8 பவுண்டுகள் மட்டுமே செலவிடுவதாக கூறி, அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளனர்.
வடகிழக்கு இத்தாலியரான 28 வயதான அன்னா மாசிலோ மற்றும் 29 வயதான கணவர் டியோகோ ஆகியோரே தங்களது புதிய வாழ்க்கை முறையால் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.
பயன்படுத்திய உடைகளை தங்கள் நண்பர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டதுடன், ஷாம்பு மற்றும் சோப்பு பார்கள் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். மேலும் புலால் உணவுகளையும் தவிர்த்துள்ளனர்.
மட்டுமின்றி, கழிவறையில் பேப்பர் பயன்படுத்துவதை நிறுத்தியதுடன், சுத்தம் செய்ய அவர்களே தயாரித்த கலவையை பயன்படுத்தியுள்ளனர். மேலும், தாங்கள் குளித்து முடித்த தண்ணீரை சேமித்து, பின்னர் உரிய முறைப்படி சுத்தம் செய்து அதை குடிக்கவும், சமையலுக்கும் செடிகளுக்கும் பயன்படுத்தியுள்ளனர்.
கழிவறையில் பேப்பர் பயன்பாட்டை நிறுத்தியதால் 14,000 லிற்றர் அளவுக்கு தண்ணீரை சேமித்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும், குளியல் நீரை மறுபடியும் பயன்படுத்துவதால் 600 லிற்றர் அதிகமாக சேமித்துள்ளனர்.
சராசரியாக ஒரு நபர் ஆண்டுக்கு 100 கழிவறை பேப்பர் ரோல்களை பயன்படுத்துவதாகவும், இதனால் 14,000 லிற்றர் தண்ணீர் செலவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி 6 மாதத்திற்கு ஒரு கருப்பு பை மட்டுமே கழிவு மற்றும் குப்பைகளுக்காக பயன்படுத்துவதாகவும் அன்னா தெரிவித்துள்ளார்.