ட்ரம்பிற்க்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், இத்தகைய வரிகளை விதிக்க ட்ரம்ப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப் பதவிட்டார்.
இராணுவ சக்தி
அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
அமெரிக்காவில் பொருட்களின் விலைகள் மிகக் குறைந்துவிட்டன.பணவீக்கம் கிட்டத்தட்ட இல்லை.
எரிசக்தி விலைகள் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.பெற்றோல் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
பல ஆண்டுகளாக நம்மை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட நாடுகளிலிருந்து ட்ரில்லியன் கணக்கான டொலர்களைக் கொண்டு வரும் அற்புதமான வரிகள் அனைத்தும் அமெரிக்காவை மீண்டும் வலிமையாகவும் மரியாதைக்குரியதாகவும் ஆக்குகின்றன.
வரிகளும், நாம் ஏற்கனவே பெற்றுள்ள ட்ரில்லியன் கணக்கான டொலர்களும் இல்லாவிட்டால், நமது நாடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு, நமது இராணுவ சக்தி உடனடியாக அழிக்கப்படும்” என்று தெரிவித்தார்.