மஹிந்த ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு!
மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) மற்றும் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) ஆகிய இருவரும் ஜூலை 28-ம் திகதி வரை நாட்டைவிட்டு வெளியேற மேல் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa), மஹிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்ஷ மீது விசாரணை நடத்தக்கோரி மேல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.
அதை தொடர்ந்து கடந்த மாதம் 15-ம் திகதி வழக்கை விசாரித்த கொழும்பு நீதிமன்றம் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவரும் ஜூலை 28-ம் திகதி வரை நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து உத்தரவிட்டது.
பின்னர் இந்த தடை ஆகஸ்டு 4-ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடையை வருகிற 11-ம் திகதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.