ஒன்றாரியோ பெற்றோருக்கு விடுக்கப்படும் அவசர அறிவித்தல்
சிறுவர்களுக்கான கோவிட் தடுப்பூசி குறித்து ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு அவசர அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தங்களது குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது தொடர்பில் பெற்றோர் முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வயதுக்கும் கூடிய மற்றும் ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட சிசுக்கள் முதல் சிறார்கள் வரையில் கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.
மருந்தகங்கள், ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையங்கள் மற்றும் தங்களது பிரத்தியேக பதிவு முறைமைகளின் ஊடாக தடுப்பூசிக்காக பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம்முதல் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாக றொரன்டோ பொதுச் சுகாதார அலுவலகம் அறிவித்துள்ளது.
ஒன்றாரியோவில் மொடர்னா சிறுவர் கோவிட் தடுப்பூசிகள் பயன்படுத்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்கான பூஸ்டர் கோவிட் தடுப்பூசியும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.