பச்சிளம் குழந்தையை பலியெடுத்த இலங்கையின் கோர நெருக்கடி!

Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka Sri Lanka Food Crisis
By Sulokshi May 23, 2022 05:22 AM GMT
Report

  இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக, பிறந்து இரண்டே நாளான பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவமானது, மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்துயரச் சம்பவம் ஹல்தும்முல்லை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தினால் குறித்த குழந்தையின் குருதியில் சீனி அளவு குறைந்து உடல் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இதனையடுத்து குழந்தையை, உடனடியாக வைத்தியசாலை கொண்டு செல்ல முயன்ற பெற்றோருக்கு, சரியான நேரத்தில் போக்குவரத்து வசதி கிடைக்கவில்லை.

குழந்தையை வைத்தியசாலை எடுத்துச் செல்ல, பெற்றோர் ஆட்டோ ஒன்றைத் தேட ஒரு மணிநேரத்துக்கும் அதிகமான நேரம் கழிந்துவிட்டது. அவர்களின் வீட்டிலிருந்து ஹல்தும்முல்லை வைத்தியசாலைக்கு செல்ல அரைமணிநேரம் தான் பயணிக்க வேண்டும்.

எனினும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று குழந்தை அம்புலன்ஸ் ஊடாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது குழந்தை உயிரிழந்துவிட்டது.

அதேசமயம் ஒருமணிநேரம் தாமதம் ஏற்படாது போயிருந்தால் குழந்தையை காப்பாற்றிக் கொள்ள முடிந்திருக்கும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.        

அதேவேளை பெற்றோல் மற்றும் மருந்து பற்றாக்குறையினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பாக வைத்தியர் ஒருவரின் பதிவை அடுத்து, இதை படித்துவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ குற்ற உணர்வுடன் இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும் என மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இந்த துயர சம்பவம் குறித்து மருத்துவர் Dr.Shanaka Roshan Pathirana வின் முகநூல் பதிவிட்டுள்ளதாவது,

இது தியதலாவ மருத்துவமனையில் எனது 86 தாவது மரண பரிசோதனையும் மிக வேதனைக்குரிய மரணமுமாகும். பிறந்து இரண்டே நாட்களான இந்தச்சிசுவை தாய்ப்பால் பருகாமல் மஞ்சள் நிறமாகி இரத்தத்தில் சக்கரை அளவு குறைந்ததால் ஹல்தும்முல்ல வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்காக தந்தை பெற்றோல் தேடி ஒரு மணி நேரம் அலைந்து திரிந்து கொண்டுவரப்பட்டபோது குழந்தையின் இரத்தத்தில் சக்கரை அளவு 22mg/dl.

அங்கிருந்து தியதலாவ மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதே குழந்தை மூச்சுத் திணறியபடி இருந்திருக்கிறது. தியதலாவ வைத்தியசாலை ETU வில் அனுமதிக்கப்பட்டு அங்கே குழந்தை இறந்து விட்டது. அந்த ஒரு மணி நேரம் பிந்தியிருக்காவிட்டால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம். தங்களுக்கு எதுவும் நேரும்வரை அடுத்தவர் துன்பம் நமக்கு புரியாது.

ஒன்பது மாதங்கள் வயிற்றில் சுமந்து இரண்டு நாட்கள் கையில் கொஞ்சிய பிஞ்சுக் குழந்தை ஒரு லீற்றர் பெற்றோல் இல்லாததால் இறந்து போனது என்கிற துக்கம் அந்தப் பெற்றோருக்கு வாழ்க்கை முழுவதும் வதைக்கப் போகிறது.

இறந்த பிஞ்சு உடலை வெட்டுவதற்கே துயரம். அங்க அவயவங்கள் எல்லாம் எந்தக் குறையுமற்று பிறந்திருந்த குழந்தை. இந்த ஆட்சியாளர்கள் அனைவருக்கும் சாபம் உண்டாகட்டும். பின்னர் இந்த சாபக்கேடான நாட்டில் கேடுகெட்ட ஆட்சியாளர்கள் உள்ள நாட்டில் வாழ்வதை விட அந்தக் குழந்தை இறந்ததே நல்லதென்று தோன்றியது என அவர் பதிவிட்டுள்ளார்.

 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US