செல்வத்தில் சாதனை படைத்த ரொனால்டோ
உலக கால்பந்தாட்ட நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது செல்வந்தர் பட்டியலில் சாதனை படைத்துள்ளார்.
ரொனால்டோவின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டொலர்களை கடந்துள்ளது.
கால்பந்தாட்ட வீரர் ஒருவரது சொத்து மதிப்பு பில்லியன் டொலர்களை எட்டிய முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
புளும்பேர்க் பில்லியனர் பட்டியலில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி, ரொனால்டோவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
40 வயதான ரொனால்டோ, சவூதி அரேபிய கழகமான அல்-நஸ்ருடன் (Al-Nassr) கடந்த ஜூன் மாதம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 400 மில்லியன் டொலருக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-இல் மான்செஸ்டர் யூனிடெட்டிலிருந்து அல்-நஸ்ருக்குச் சென்ற ரொனால்டோ, வருடாந்திர 237 மில்லியன் டொலர் சம்பளத்துடன் வரலாற்றில் அதிகபட்சம் சம்பளம் பெறும் கால்பந்து வீரர் ஆனார்.
மேலும், அவரது கழகத்திலிருந:து இருந்து 15 சதவீத லாப பங்கும் கிடைப்பதாக அறியப்படுகிறது. 2002 முதல் 2023 வரை ரொனால்டோ சம்பளமாக 550 மில்லியன் டொலருக்கும் மேலாக ஈட்டியுள்ளார்.