சிட்னியின் நங்கூரமிட்ட சொகுசு கப்பல்: தெரிய வந்த உண்மை
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நங்கூரமிட்ட சொகுசு கப்பலில் 800 பயணிகளுக்கு கொரோனா தொற்று பாதித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் இருந்து புறப்பட்ட மெஜஸ்டிக் பிரின்சஸ் பயணக் கப்பலானது Circular Quay பகுதியில் வந்து சேர்ந்தது. குறித்த கப்பலில் 4,600 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்துள்ளனர்.
இதில் 800 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ல் ரூபி பிரின்சஸ் பயணக் கப்பலிலும் இதுபோன்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மொத்தம் 900 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில், 28 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.
தற்போது மெஜஸ்டிக் பிரின்சஸ் கப்பலிலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. 12 நாட்கள் கொண்ட பயணத்தில் பாதி வழியிலேயே கொரோனா பாதிப்பு பலருக்கும் கண்டறியப்பட்டதாக கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் ஆனால் அந்த கப்பலானது மெல்போர்ன் நகருக்கு மிக விரைவில் புறப்பட்டு செல்லும் எனவும் நிர்வாகிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.