காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு ஊரடங்கு உத்தரவு
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிய காட்டுத் தீ காரணமாக 300,000 பேர் வரை அப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் 10,000இற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
பாலிசேட்ஸ், ஈட்டன், கென்னத் ஆகிய பகுதிகளில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், லாஸ் ஏஞ்சலஸ் எல்லைப் பகுதியில் உள்ள வென்டுரா கவுன்ட்டியில் புதிதாக நேற்று காற்றுத் தீ பற்றியுள்ளது.
இதுவரை லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத் தீக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அமெரிக்க வரலாற்றிலேயே ஏற்பட்ட பெரிய காட்டுத் தீ இது என குறிப்பிடப்பட்டுள்ளது.