கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபரில் தற்போதைய நிலை
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) , பெரும்பாலான COVID-19 அறிகுறிகளிலிருந்து குணமடைந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். அந்தவகையில் இந்த வாரம் பணிகளை மீண்டும் முழுமையாகத் தொடரத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
வர்த்தகத் தலைவர்கள் சிலரைக் காணொளி வழி சந்தித்த அவர் (Joe Biden) , தெம்பாக உணர்கிறேன் என தெரிவித்த போதும், அமெரிக்க அதிபரின் குரல் இன்னமும் சற்றுக் கரகரப்பாகவே இருந்தது.
சென்ற வியாழக்கிழமை நோய்த்தொற்று உறுதியானது முதல் வெள்ளை மாளிகையில் அதிபர் (Joe Biden) தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.
தமது பணிகளைத் தொடர்ந்த 79 வயது பைடனின் (Joe Biden) உடல்நிலை தற்போது நன்றாகத் தேறிவருவதாக வெள்ளை மாளிகை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.