காற்பந்தாட்ட ஜாம்பவான் பெலே தொடர்பில் மகளின் உருக்கமான பதிவு!
காற்பந்து உலகில் சரித்திரம் படைத்த பெலே (Pele) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அவர் மகள் கெலி நஸ்சிமெந்தொ (Kely Nascimento) நேற்று அவரது Instagram பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
வீக்கம் ஏற்பட்டதால் அவர் சாவ் பாவ்லோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனைக்குக் (Sao Paulo's Hospital Albert Einstein) கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நலம் குறித்து அவர் மகள் கூறுகையில்,
"எனது தந்தையின் உடல் நலம் குறித்து பல்வேறு செய்திகள் பகிரப்படுகின்றன. அவர் உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லை. புத்தாண்டுத் தினத்தன்று கண்டிப்பாக அவரது படங்களைப் பகிர்ந்துகொள்வேன்,"என கெலி கூறினார்.
மேலும் பெலே நீண்ட காலமாகப் புற்றுநோயால் அவதிப்படுகிறார் என தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவரது பெருங்குடலிலிருந்து கட்டி நீக்கப்பட்டது.
அதன் பின்னர், அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அதோடு, அவருக்கு இதய நோய் உள்ளதாகவும் அவருக்கு அளிக்கப்பட்ட chemotherapy சிகிச்சை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.