சுவிஸில் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தவர்கள் விபரம்!
சுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 4,838 பேர் பாதிக்கப்பட்டதோடு 3 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் இதுவரை மொத்தமாக 10 இலட்சத்து 39ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11 ஆயிரத்து 606 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுவிஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 1 இலட்சத்து 60 ஆயிரத்து 264 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 213 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுவிஸில் 2,970 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 8 இலட்சத்து 67 ஆயிரத்து 860 பேர் குணமடைந்துள்ளனர்.