ரொறன்ரோவில் தாமதமாகும் பைசர் தடுப்பூசி விநியோகம்!
ரொறன்ரோ நகர தடுப்பூசி மையங்களுக்கான பைசர் தடுப்பூசி விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மொடேர்னா தடுப்பூசியே போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சத்து 62 ஆயிரம் தடுப்பூசிகள் எதிர்பார்க்கப்பட்டது போன்று இன்று வந்தடையாது என்று ரொறன்ரோ பொது சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. இதை அடுத்தே, நகர நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் மொடேனா தடுப்பூசிக்குப் பதிவு செய்து கொண்டவர்களும், ஏற்கனவே பைசர் தடுப்பூசிக்கு பதிவு செய்து கொண்டவர்களும் மொடேனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேவேளை பைசர் தடுப்பூசி 12 வயது தொடக்கம் 17 வயதான இளையோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.