ரொறன்ரோ விமான நிலையத்தில் போக்கவரத்து பாதிப்பு
ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தில் தொடர்ந்து தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்ததை தொடர்ந்து விமானப் பயணங்களில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த விமானம் சென் போல் நகரிலிருந்து பயணித்த நியைலில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் 80 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துக்குப் பிறகு விமான நிலையத்தில் போக்குவரத்து பல மணி நேரத்திற்கு நிறுத்தப்பட்டது.
இன்றைய தினம் காலலையிலும் பியர்சன் விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் இன்னும் எதுவும் கூறவில்லை, ஆனால் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் சில நாட்களுக்குல் மேலும் விமான தாமதங்களும் விமானப் பயணங்களும் ரத்தாகும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக முதல்வர் டக் போர்ட்டின் பிரச்சாரப் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பிரச்சாரப் பணிக்காக விமானத்தில் பயணிக்கவிருந்த போதிலும் அந்த விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.