தற்கொலை செய்துகொண்டாரா கிரஹாம் தோர்ப்?
இங்கிலாந்தின் சிறந்த துடுப்பாட்ட வீரர் கிரஹாம் தோர்ப்பின் (Graham Thorpe) மரணம் தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தோர்ப்பின் மனைவி அமண்டா, அவர் சில காலமாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிவித்துள்ளார். சுமார் 2 ஆண்டுகளாக கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த தோர்ப் (Graham Thorpe), கடந்த 5 ஆம் திகதி காலமானார்.
கிரஹாம் தோர்ப் இறக்கும் போது அவருக்கு வயது 55. தோர்ப் மார்ச் 2022 இல் ஆப்கானிஸ்தான் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டாலும், நியமனம் செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே அவர் (Graham Thorpe)அனைத்து பயிற்சிப் பொறுப்புகளிலிருந்தும் விலகினார்.
அன்றிலிருந்து அவர் இறக்கும் வரை, கிரஹாம் தோர்ப் (Graham Thorpe) தொடர்பான அனைத்து தகவல்களும் குடும்பத்திற்குள் மட்டுமே இருந்தன.
அதேவேளை (Graham Thorpe) சுமார் 12 ஆண்டுகள் (1993 - 2005) இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய தோர்ப், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய புகழ்பெற்ற இடது கை துடுப்பாட்ட வீரராவார்.