அவுஸ்திரேலியாவில் கடல் அலைகளில் சிக்கி மூவர் பலி
அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளைத் தாக்கிய சக்தி வாய்ந்த அலைகளில் சிக்கி ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களின் கடற்கரைகளில் மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.
தெற்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள டாத்ரா அருகே சனிக்கிழமை அன்று நீரில் மிதந்த ஆண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
58 வயது மீனவர் ஒருவரும் இரண்டு ஆண்களும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உயிரிழந்த கிடந்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிட்னி அருகே நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். வெள்ளிக்கிழமையும், ஒரு குழுவினர் விக்டோரியாவின் சான் ரெமோவில் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட நிலையில் பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு, ஆண்ணொருவர் காணாமல் போயுள்ளார்.
அதில், பெண்ணொருவர் கரைக்கு திரும்பிய நிலையில், மற்றுமொரு பெண்ணும் ஆணும் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் கிழக்கு மாநிலங்கள் ஆபத்தான அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
சர்ஃப் லைஃப் சேவிங் அவுஸ்திரேலியா என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஆடம் வீர்,
கடந்த 10 ஆண்டுகளில் 630 பேர் கண்காணிப்பு இல்லாத கடலில் மூழ்கி உயழிரிழந்துள்ளதாக தரவுகளை சுட்டிக்காட்டிய அவர், உயிர்காக்கும் சேவையின் உறுப்பினர்கள் இருக்கும் கடற்கரைகளுக்குச் செல்லுமாறு விடுமுறைக்கு வருபவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.