கின்னஸ் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி! வியக்கவைக்கும் வைரல் வீடியோ
அமெரிக்காவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரரான சீயோன் கிளார்க்கின் உலக சாதனை தொடர்பான காணொளி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பிறக்கும்போதே இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்த மிஸ்டர் கிளார்க், தனது விடா முயற்சியால் தடகளத்தில் சாதனை படைத்து வருகிறார்.
கால்கள் இல்லாத நிலையில் கைகளால் வேகமாக நடக்கும் பயிற்சியை மேற்கொண்ட அவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு 20 மீட்டர் தூரத்தை 4.78 வினாடிகளில் கடந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.
இந்த காணொளயை சமீபத்தில் வெளியிட்டுள்ள கின்னஸ் சாதனை அமைப்பு, 'இரண்டு கைகளில் வேகமாக நடக்கும் மனிதரான சீயோன் கிளார்க்கை பாருங்கள்' என கூறியிருந்தது.
Meet Zion Clark, the fastest man on two hands ? pic.twitter.com/AVPNlT0cIT
— Guinness World Records (@GWR) January 22, 2023
அதேபோல் 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம், லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஜிம்மில் மூன்று நிமிடங்களில் கைகளால் அதிக பாக்ஸ் ஜம்ப் மற்றும் அதிக டைமண்ட் புஷ்-அப்கள் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மன உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் உலக சாதனையை முறியடிக்கமுடியும் என்பதை சீயோன் கிளார்க் நிரூபித்திருக்கிறார்.