சந்திரயான்-3 தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிடாதீர்!
ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ள நிலையில் , அந்த மர்ம்ம பொருள் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் பாகமாக இருக்க கூடுமோ என சந்தேகிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் மேற்கில் ஜீரியன் விரிகுடா கடற்கரையில் பெரிய அளவிலான உலோக பொருளின் பாகம் கரை ஒதுங்கி உள்ளது. இது 2 மீட்டர் உயரம், 2 மீட்டர் அகலம் உடையதாக உள்ளது.
ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனத்திடம் இருந்து கடிதம்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், அபாயகரமான அந்த பொருளில் இருந்து விலகி இருக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
கரை ஒதுங்கிய மர்ம பொருள் தொடர்பாக விசாரித்து வருகிறோம். இது ஒரு வெளிநாட்டு ராக்கெட்டில் இருந்து பிரிந்த பாகமாக இருக்கலாம் என்றார். அதன் தோற்றம் தெரியாததால் அதை கையாளவோ அல்லது நகர்த்தவோ மக்கள் முயற்சிக்க கூடாது என்றும் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனத்திடம் இருந்து இது தொடர்பாக கடிதம் வந்திருப்பதை இஸ்ரோ உறுதிபடுத்தி உள்ளது.
இது சமீபத்தில் இந்தியா ஏவிய சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகம் அல்லது பறக்கும் தட்டிலிருந்து பிரிந்த பாகம் அல்லது காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் அது குறித்து உண்மைதன்மை தெரியும்வரை இது போன்ற ஊகங்களை தவிர்க்குமாறு பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்டுகின்றது.