வளர்ப்பு நாயால் பறிபோன முதலாளியின் உயிர்
அமெரிக்காவின் கனாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ஸ்மித் என்ற பிளம்பரான இவர் வேட்டையாடி வந்துள்ளார்.
அதன்பேரில் கடந்த 21ஆம் திகதி தன் வளர்ப்பு நாயுடன் வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது தன் காரை முன் இருக்கையில் அமர்ந்து ஜோசப் ஓட்டிச் செல்ல பின் இருக்கையில் நாய் இருந்துள்ளது.
அதே இருக்கையில் வேட்டைக்கான துப்பாக்கியும் இருந்துள்ளது. அந்த நாய் எதிர்பாராத விதமாக துப்பாக்கி மீது ஏறிக் குதித்துள்ளது.
அப்போது துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு காரை ஓட்டிக்கொண்டிருந்த ஜோசப் மீது பாய்ந்துள்ளது.
இதில் ஜோசப் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் “துப்பாக்கி மீது நாய் ஏறி விளையாண்டதால் குண்டு வெளியேறி அவர் உயிர் பிரிந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
2022ஆம் ஆண்டில் மட்டும் 648 துப்பாக்கிச்சூடு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.