டக் ஃபோர்டுக்கு மூன்றாவது முறையாக வெற்றி
அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலால் ஒன்டாரியோ பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படலாம் என்ற சூழ்நிலையில் நடத்தப்பட்ட திடீர் தேர்தலில், டக் ஃபோர்ட் மற்றும் அவரது புரோகிரஸிவ் கன்சர்வேடிவ் (PC) கட்சி மூன்றாவது முறையாக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றிரவு நிலவரப்படி, ஃபோர்டின் பிசி கட்சி 81 இடங்களில் முன்னிலை பெற்றது, இது முன்பிருந்த 79 இடங்களின் எண்ணிக்கையை விட அதிகம். என்.டி.பி. (NDP) 26 இடங்களைப் பெற்றதால், அவர்கள் மீண்டும் ஒன்டாரியோவில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளனர். லிபரல் கட்சி 14 இடங்களை வென்று 2022 தேர்தலைவிட மேம்பட்ட நிலையை அடைந்திருந்தாலும், கட்சித் தலைவர் பானி க்ராம்பி (Bonnie Crombie) தனது தொகுதியில் தோல்வி அடைந்தார்.
வெற்றிக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்த டக் ஃபோர்டு, “ஒன்டாரியோவை பாதுகாக்க ஒரு வலுவான, வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது பெரும்பான்மை ஆட்சியை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்,” என உரையாற்றினார்.
அவர் தனது ஆதரவாளர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்ததுடன், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
“கொள்கைகளில் வேறுபாடு இருக்கலாம், ஆனால் ஒவ்வொருவரும் இந்த மண்ணை நேசிப்பவர்கள் என்பதை சந்தேகமே இல்லை. ஒவ்வொருவரும் கனடாவை நேசிக்கிறார்கள், இது உலகில் மிகச் சிறந்த நாடு என தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒத்துழைத்து பணியாற்ற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறினார்:
“கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51வது மாநிலமாகாது என தெரிவித்துள்ளார்.