டஜன் கணக்கில் விற்பனை ஆகும் டிரம்ப் சிலைகள்!
புத்தரைப் போல சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் டொனால்ட் டிரம்பின் வெள்ளை பீங்கான் சிலைகள் ஆன்லைனில் பிரபலமாகி உள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக் காலத்தை முடித்துவிட்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், புத்தரைப் போல சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் டொனால்ட் டிரம்பின் வெள்ளை பீங்கான் சிலைகள் ஆன்லைனில் பிரபலமாகி உள்ளது.
ஒரு சீன தொழில் முனைவோரால் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த சிலை. சிலையில், டிரம்ப் சம்மணம் போட்டு உட்கார்ந்து கைகளை மடியில் மடித்து வைத்துக் கொண்டிருப்பதைக் போல் உள்ளது. கட்டைவிரல் வெளிப்புறத்தை சுட்டிக்காட்டுகிறது, இது தியானம் மற்றும் சிந்தனையை குறிக்கும் புத்தர் போஸ் என்று கூறப்படுகிறது.
"பெரும்பாலான மக்கள் டிரம்ப் புத்தராக வடிக்கப்பட்டிருக்கும் சிலையை வேடிக்கைக்காக விரும்பி வாங்குகின்றனர் என்று விற்பனையாளர் ஒருவர் கூறியுள்ளார். இதற்கிடையில், ஷாங்காயில் சிலையை வாங்குபவர் ஒருவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டிரம்பின் சிலைகளில் ஒன்றை வேடிக்கையாக வாங்கியதாகவும், மேசையில் அலங்காரப் பொருளாக வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.
ஈ-காமர்ஸ் தளத்தில், டிரம்பின் புத்தர் சிலையின் தயாரிப்பு மற்றும் விளக்கத்தில் "டிரம்ப் புத்தர், வேறு யாரையும் விட புத்த மதத்தைப் பற்றி நன்கு அறிவார்", அவரை உங்கள் அலுவலகத்தில் வைத்தால் "உங்கள் நிறுவனம் மீண்டும் நன்கு வளர்ச்சி அடையும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.