கனடாவின் கேலிடனில் இரு வாகனங்கள் மோதி விபத்து
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் கேலிடன் பகுதியில் ஏற்பட்ட கடுமையான இரு வாகனங்கள் மோதிய விபத்தில், ஒரு ஓட்டுநர் உயிரிழந்தார் மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒன்டாரியோ மாகாண பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த விபத்து ஹைவே 9-இல், ஹைவே 50 மற்றும் டாட்டன்ஹாம் ரோடு (Tottenham Road) இடையிலான பகுதியில் நடைபெற்றுள்ளது.
சம்பவ இடத்திலேயே ஒரு ஓட்டுநர் உயிரிழந்ததாக, தெரிவிக்கப்படுகின்றது.

மற்றொரு ஓட்டுநர் சிறிய காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான விசாரணை காரணமாக, ஹைவே 9 பல மணி நேரங்கள் மூடப்பட்டிருந்தது.
விசாரணை முடிந்த பின்னர், தற்போது அந்தச் சாலை மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.