எகிப்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி விபத்து; 7 பேர் உயிரிழப்பு, 112 பேர் காயம்!
எகிப்தின் கெய்ரோ நகருக்குத் தெற்கே சுமார் 76 கி.மீ (47 மைல்) தொலைவில் ஞாயிற்றுக்கிழமை (08) இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததுடன், 112 பேர் காயமடைந்ததாக எகிப்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிசாவிலிருந்து ஃபயூம் நோக்கிச் சென்ற ரயில், கெய்ரோவிலிருந்து அஸ்வான் நோக்கிச் சென்ற மற்றொரு ரயிலின் பின்பகுதியில் மோதியதாகவும், இதனால் பல பெட்டிகள் தடம் புரண்டன என்றும் அரசு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான தொழில்நுட்பக் காரணங்களைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக எகிப்தின் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எகிப்தில் இப்பகுதியிலேயே மிகவும் பழமையான மற்றும் மிகப்பெரிய ரயில்வே வலைப்பின்னல்களில் ஒன்று உள்ளது.
அங்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. இருப்பினும், இந்த ரயில்வே கட்டமைப்பை நவீனப்படுத்துவதற்காக எகிப்திய அரசு பல பில்லியன் எகிப்திய பவுண்டுகளை முதலீடு செய்து வருகிறது.
அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான ரயில் விபத்தாகக் கருதப்படும் 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தில், அதிகப்படியான பயணிகளுடன் சென்ற ரயிலின் ஏழு பெட்டிகளில் தீப்பிடித்ததில், குறைந்தது 360 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது