டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் 2021ல் செலுத்தப்போகும் வரித்தொகை தெரியுமா?
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரும், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் 2021-ம் ஆண்டில் அமெரிக்காவில் அதிகமான வரி செலுத்துபவராக இருப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கோடீஸ்வரரான எலான் மஸ்கின் மொத்த சொத்துமதிப்பு 266 பில்லியன் டொலர். எலான் மஸ்க் நடத்தும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு மட்டும் 100 பில்லியன் டொலர்கள்.
இந்த நிலையில், 2021ம் ஆண்டில் மட்டும் எலான் மக்ஸ் ஏறக்குறைய 1200 கோடி டொலர் வரை வரி செலுத்தலாம் எனத் தெரிகிறது. முதல்கட்ட கணிப்பில் இந்த ஆண்டுக்குள் 1,100 கோடி டொலர் வரியாகச் செலுத்துவார் எனத் தெரியவந்துள்ளது.
இது உத்தேச மதிப்புதான் என்றாலும், வரி செலுத்தும் மதிப்பு 1200 கோடி டொலரை எட்டும் எனக் கணிக்கப்படுகிறது. இந்த வரி தொகையை அவர் செலுத்தும் பட்சத்தில் அமெரிக்காவில் ஒரு தனிநபர் செலுத்திய அதிகபட்ச வரியாக அது இருக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே, ப்ரோ பப்ளிக்கா எனும் புலனாய்வு நிறுவனம் முன்னெடுத்த ஆய்வு தொடர்பில் ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில், எலான் மஸ்க் தனது சொத்து மதிப்பில் குறைவாகவே வரி செலுத்துகிறார் எனவும்,
2014 முதல் 2018 வரையில் 45.50 கோடி டொலர்கள் மட்டுமே வரியாகச் செலுத்தியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எலான் மஸ்க்கின் சொத்து இடைப்பட்ட காலத்தில் பெருமளவு வளர்ந்துள்ளது எனவும், கடந்த 2018-ம் ஆண்டு அவர் எந்த வரியும் அமெரிக்க அரசுக்கு செலுத்தவில்லை எனத் தெரிவி்த்துள்ளது.