ரஷ்யா மீது பொருளாதாரத் தடை ; தூதர்களை வெளியேறுமாறு அமெரிக்கா அதிரடி உத்தரவு

Russia leave US ambassadors Embargo
By Sulokshi Apr 17, 2021 05:48 AM GMT
Report

அமெரிக்காவின் அரசுத்துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 10 தூதர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டது மற்றும் அரசுத் துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியது ஆகிய விவகாரங்களில் ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், ர‌ஷ்யா தலையிட்டு குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்புக்கு ஆதரவாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளின்டனுக்கு எதிராகவும் செயல்பட்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ரொபர்ட் முல்லர் தலைமையில், விசாரணை நடத்தப்பட்டது. அதில் அமெரிக்க தேர்தலில் ர‌ஷ்யா தலையீடு இருந்தது உண்மை என்றாலும், ரஷ்ய அதிகாரிகளுக்கும் டிரம்ப் பிரசார குழுவுக்கும் ரகசிய தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என ரொபர்ட் முல்லர் தலைமையிலான விசாரணைக்குழு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அப்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு சாதகமான வகையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீது தவறான, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை, டிரம்ப் ஆதரவாளர்கள் மூலம் பரப்ப ரஷ்ய ஜனாதிபதி புட்டின் உத்தரவிட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதேபோல் கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவின் அரசுத்துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் இந்த 2 குற்றச்சாட்டுகளையும் ரஷ்யா திட்டவட்டமாக மறுக்கிறது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டமை மற்றும் அரசுத் துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியமை போன்ற விவகாரங்களில் ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதர்கள் 10 பேர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர். இதற்கான நிர்வாக உத்தரவை ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்தார்.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு மற்றும் அரசுத்துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், ரஷ்ய அரசுக்கு எதிரான பொருளாதார தடைகள் விரிவுபடுத்தும் உத்தரவை ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்துள்ளாா். அதன்படி 32 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், தோ்தல் தலையீட்டில் அங்கம் வகித்த உளவாளிகள் உள்ளிட்ட 10 ரஷ்ய தூதரக அதிகாரிகள் அமெரிக்காவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.‌ சா்வதேச அளவில் ஸ்திரத்தன்மையை குழப்பும் வகையில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் தொடா்ந்தால் அதற்கு அமெரிக்கா தகுந்த பதிலடி கொடுக்கும் என்பதை ஜனாதிபதி பைடனின் இந்த உத்தரவு உணர்த்துகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது‌. அதேசமயம் ரஷ்யாவுடன் மோதும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில்,

‘‘ரஷ்யா மீது இன்னும் அதிகமான நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஆனால் நான் அதை விரும்பவில்லை. அமெரிக்கா ரஷ்யாவுடன் மோத விரும்பவில்லை. பேச்சுவார்த்தை மூலமாகவும் தூதரக ரீதியிலும் இருதரப்பு உறவை வலுப்படுத்த விரும்புகிறேன். ரஷ்ய ஜனாதிபதி புட்டினை நேரில் சந்தித்து பேச அவரிடம் விருப்பம் தெரிவித்துள்ளேன். இந்த சந்திப்பு இரு தரப்புக்கும் பரஸ்பர நலன் அளிக்கக்கூடியதாக இருக்கும்’’ என கூறினார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US