சட்டவிரோத குடியேற்றத்தை குறைக்க இங்கிலாந்தில் புதிய திட்டம்
இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம் அமுல்படத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவிருக்கும் குடிவரவு சீர்திருத்தங்கள் தொடர்பாக, உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் , நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.

சட்டவிரோதக் குடியேற்றத்தை எதிர்கொள்ள புதிய விதிமுறைகளை அறிவிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது நாடுகடத்தலை எளிதாக்குவதையும், அகதிகளை இங்கிலாந்துக்கும் ஈர்க்கும் ‘இழுவை காரணிகளை’ குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இங்கிலாந்தின் அதிகப்படியான பெருந்தன்மை மற்றும் தங்குவதற்கான வசதி ஆகியவை நாடுகடத்தலை மிகவும் கடினமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டென்மார்க்கில் தோல்வியுற்ற புகலிடக் கோரிக்கையாளர்களில் 95% பேர் நாடு கடத்தப்படும் திட்டத்தினை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சீர்திருத்தம் அமைந்துள்ளது.
அதேவேளை இந்த சீர்திருத்தங்களில் குடும்ப மீள்சேர்க்கை விதிகளை இறுக்குதல் மற்றும் சில அகதிகளுக்கு தற்காலிக தங்குமிடத்தை மாத்திரமே அனுமதித்தல் போன்ற மாற்றங்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.