நாடொன்றில் அகதிகள் வெளியேற்றம்!
கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றில் தங்கியிருந்த அகதிகள் பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பரிஸ் 9 ஆம் வட்டாரத்தின் La Chapelle Debout பகுதியில் தங்கியிருந்த அகதிகளே வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இங்குள்ள பயன்படுத்தப்படாத அலுவலகம் ஒன்றை ஆக்கிரமித்த அகதிகள் பலர், கடந்த சில வாரங்களாக தங்கியிருந்தனர்.
அவர்கள் மிகவும் மோசமான உடல்நலக்குறைவுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அகதிகளை அங்கிருந்து வெளியேற்றினர்.
மொத்தமாக 75 அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களில் 21 பேர் குடும்பமாக வசித்துள்ளனர் எனவும், மீதமானவர்கள் தனி நபர்கள் எனவும் அறிய முடிகிறது.
பேருந்துகளில் ஏற்றப்பட்ட அகதிகள் இல்-து-பிரான்சின் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதி முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதேவேளை, மேற்படி அகதிகளில் ‘ஆறு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக’ அறிய முடிகிறது.