பழங்குடியின முன்னாள் தேசியத் தலைவர் மீது சிறுவர் பாலியல் குற்றச்சாட்டு
கனடாவின் பழங்குடியின முன்னாள் தேசியத் தலைவர் மற்றும் பழங்குடியின உரிமை போராளி பில் (லாரி பிலிப்) ஃபாண்டெய்ன் மீது, 1970களில் ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மானிடோபா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்கில், ஃபாண்டெய்ன், பள்ளி பயணத்தை ஏற்பாடு செய்து வழிநடத்தியபோது, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சிறுமியை பாலியல் குற்றத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு படி, பள்ளி நிர்வாகம் ஃபாண்டெய்னுக்கு வழங்கிய அதிகாரம் காரணமாக அவர் குடும்பத்தினரிடையே நம்பகமான நபராக மாறி, மாணவியுடன் தவறான உறவை பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஃபாண்டெய்ன் எப்போதும் தங்களின் பணியாளர் அல்லது பிரதிநிதி அல்ல என்றும், 1973இல் அவர் Sagkeeng பழங்குடியினத் தலைவராக இருந்ததாகவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்ய சாகிங் கல்வி நிர்வாகம் தனது பதிலில், கோரியுள்ளது.
பில் ஃபாண்டெய்ன், மானிடோபாவின் Sagkeeng First Nation பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அவர் 1997–2000 மற்றும் 2003–2009 காலங்களில் ஏ.எப்.என். தேசியத் தலைவராக மூன்று தவணைகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.