கனடாவில் கோவிட் தடுப்பூசி குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிப்பு
கனடாவில் கோவிட்19 தடுப்பூசி தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இலையுதிர் காலத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட புதிய கோவிட் 19 எம்ஆர்என்ஏ COVID-19 mRNA தடுப்பூசிகள் மிக முக்கியமானவை என தொற்றுநோய் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
பலர் COVID-ஐ மறந்துவிட்டதாக நினைத்தாலும், இது இன்னும் மிகவும் அபாயகரமான நோயாக இருக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பைசர் மற்றும் மொடர்னா ஆகிய நிறுவனங்களினால் புதிப்பிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு கனடிய சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தடுப்பூசிகள் புதிய கோவிட் திரிவுகளை கட்டுப்படுத்தக் கூடியவை என தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் புதிய தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.