இரு முக்கிய நாடுகளுக்கிடையே நீட்டிக்கப்பட்ட விமான சேவை!
அமெரிக்கா - சீனா நாடுகளுக்கிடையே விமான சேவை நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா -சீனா நாடுகளுக்கிடையே முன்னர் பல விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் அதன் தேவை குறைந்ததால் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இவ்வாறான நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் இரு நாடுகளுக்கு இடையேயான விமானத்தின் தேவை அதிகரித்து வருகிறது.
எனவே விமான சேவைகளின் அட்டவணையை விரிவுபடுத்துவதாக அமெரிக்க டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது.
இதன்படி, ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்துக்கு அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இருந்து தினமும், டெட்ராய்டு விமான நிலையத்தில் இருந்து வாரத்துக்கு 3 முறையும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும், 2020-ல் ரத்து செய்யப்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் - ஷாங்காய் விமான சேவை மீண்டும் வாரத்துக்கு 4 முறை இயக்கப்படும் என டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.