வடகொரியா ஜனாதிபதியின் புதிய தடை ; குறித்த ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தினால் கடும் தண்டனை
வடகொரியாவில் சில குறிப்பிட்ட ஆங்கில வார்த்தைகளுக்கு அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார்.
அதன்படி Hamburger, Ice Cream, Karaoke என்ற ஆங்கில வார்த்தைகளை இனிமேல் வடகொரியாவில் உச்சரிக்கவே கூடாது. அதேசமயம் இவற்றுக்கான மாற்றுச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
Hamburger, Ice Cream, Karaoke ஆகிய வார்த்தைகள் மேற்கத்திய வாழ்க்கை முறை மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தின் சின்னங்களாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Hamburger-க்கு பதிலாக கொத்துக்கறியுடன் கூடிய இரட்டை ரொட்டி என பொருள்படும் "dajin-gogi gyeoppang" என்ற சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும்.
Ice Cream-க்கு பதிலாக "eseukimo" என்ற வார்த்தை பயன்படுத்திக் கொள்ளலாம். Karaoke என்ற சொல்லுக்கு பதிலாக screen accompaniment machine என்ற சொல்லைத்தான் உபயோகிக்க வேண்டும்.
வடகொரிய மொழியின் தூய்மையைப் பாதுகாக்கவும், தனித்துவமான தேசிய அடையாளத்தை நிலைநிறுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்கத்திய நாடுகள் மற்றும் அண்டை நாடான தென் கொரியாவின் செல்வாக்கு தங்கள் நாட்டின் மீது பரவுவதைத் தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார் கிம்.
பொதுவாக, வடகொரியாவில் மேற்கத்திய கலாச்சாரத்தின் செல்வாக்கைக் கொண்ட எந்த ஒரு செயலுக்கும் கடுமையான தண்டனை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.