அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்... ஓராண்டாக மாயமான பெண்ணின் குடும்பம் நம்பிக்கை
கனடாவில் பொலிஸ் வேடத்தில் குழு ஒன்று வீடு புகுந்து கடத்தப்பட்ட பெண் தொடர்பில், ஓராண்டுக்கு பின்னரும் நம்பிக்கையுடன் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022 ஜனவரி 12ம் திகதி Elnaz Hajtamiri என்ற 37 வயது பெண் கடத்தப்பட்டார். சம்பவம் நடந்து ஓராண்டு கடந்தும் பொலிசாரால் துப்புத்துலங்காமல் உள்ளது இந்த விவகாரம்.
Elnaz Hajtamiri மாயமான அன்று முதல் துயரத்தில் இருந்து மீளவில்லை என கூறும் குடும்பத்தினர், அவர் இன்னமும் உயிருடன் இருக்கிறார் என்றே நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
ஒருநாள் அவரை உயிருடன் பார்ப்போம் எனவும் உறுதியுடன் கூறுகின்றனர். ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் விசாரித்து வருகின்ரனர். மட்டுமின்றி, பொதுமக்களிடம் உதவியும் கோரியுள்ளனர்.
கடத்தப்பட்ட Elnaz Hajtamiri தொடர்பில் அவரது முன்னாள் காதலன் Mohamad Lilo மீது கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மட்டுமின்றி, யோர்க் பிராந்திய பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் மேலும் இருவர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
ஆனால் பொலிஸ் வேடத்தில் வீடு புகுந்த அந்த மூவர் குறித்து இதுவரை ஒன்ராறியோ பிராந்திய பொலிசாருக்கு எந்த தகவலும் இல்லை என்றே கூறுகின்றனர். முன்னாள் காதலரால் அபாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொலிசார் தமது சகோதரியை எச்சரித்திருந்ததாக Aysa Hajtamiri தெரிவித்துள்ளார்.
ஆனால் அப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என பொலிசார் மறுத்துள்ளனர். இருப்பினும் தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்பதாக பொலிஸ் தரப்பு தற்போதும் உறுதி அளித்துள்ளது.
மேலும், கடத்தப்பட்டு ஓரண்டு கடந்த பின்னரும், அவர் உயிருடன் இருப்பார் என்பதில் தங்களுக்கு சந்தேகம் அச்சமும் இருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.