பிரபல ஜேர்மன் பாடிபில்டர் 30 வயதில் திடீர் மரணம்; வெளியான அதிர்ச்சி தகவல்!
பிரபல ஜேர்மன் பாடிபில்டர் 30 வயதில் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மன் பாடிபில்டர் மற்றும் யூடியூப் நட்சத்திரம் ஜோ லிண்ட்னர் என்கிற Joesthetics தனது 30வது வயதில் திடீரென காலமானார்.
அவர் தலை நரம்பு வெடித்ததால் இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளம் வயதிலேயே, தனது உடல் கட்டமைப்பால் பிரபலமான ஜோ லிண்ட்னர், உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு உத்வேகமாக இருந்தார்.
சமூக ஊடக இன்ஃப்ளுயன்சரான Joesthetics, இன்ஸ்டாகிராமில் 8.5 மில்லியன் பின்தொடர்பவர்களையும், அவரது யூடியூப் சேனலில் 9.5 லட்சம் சப்ஸ்கிரைபர்களுடன் 500 மில்லியன் பார்வைகளையும் பெற்றிருந்தார்.
இந்நிலையில் அவரது திடீர் மறைவு அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோ லிண்ட்னர் ராஷ்மிகா மந்தனா நடித்த கன்னட திரைப்படமான போகருவிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லிண்ட்னருக்கு அனியூரிசம் என்ற ஆபத்தான நோய் இருந்தது. இந்த நோய் பொதுவாக தலை, கால்கள் மற்றும் வயிற்றில் ஏற்படுகிறது.இந்த நோயின் அறிகுறிகளைக் கூறுவது கடினம். ஏனெனில் அதன் அறிகுறிகள் தெரிவதில்லை.
உடலின் ஒரு பகுதியில் இருந்து திடீரென ரத்தக் கசிவு, திடீரென இதயத் துடிப்பு அதிகரிப்பு, நரம்புகளில் கடுமையான வலி, தலைசுற்றல், கண்களுக்கு மேல் அல்லது கீழ் வலி ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.