பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் பிரபல மாடல் அழகிக்கு நேர்ந்த சோகம்!
கலிபோர்னியாவில் திடீரென மாரடைப்பால் பிரபல மாடல் அழகி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த 34 வயதான கிறிஸ்டினா ஆஷ்டேன் கூர்கானி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர், கிம் கர்தாஷியன் தோற்றத்துடன் பிரபல மாடல் அழகியாக வலம் வந்ததுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 618K யிற்கும் அதிகமான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்தனர்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் மாரடைப்பு ஏற்பட்ட அவரது குடும்பத்தினர் கலிபோர்னியா மருத்துவமனையில் சேர்த்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பில் கிறிஸ்டினாவின் குடும்பத்தினர் சமூகவலைத்தளத்தில், ‘எங்கள் அழகான, அன்பு மகளும் சகோதரியுமான கிறிஸ்டினா ஆஷ்டேன் கூர்கானியின் துரதிர்ஷ்டவசமான மறைவை நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம் எனவும் ஆழ்ந்த சோகத்துடனும், உடைந்த இதயத்துடனும் இருக்கின்றோம் என்று பதிவிட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக பொலிஸார் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.