பாலம் இடிந்து விழுந்து விபத்து... சிறார்கள் உட்பட பலர் காயம்
பின்லாந்தில் எஸ்பூ நகரில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் சிறார்கள் உட்பட 27 பேர்கள் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்த சிறாகள் அனைவரும் பாடசாலை மாணவர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் ஹெல்சின்கியில் உள்ள கலசடமா ஆரம்பப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் பாலம் சரிந்தபோது சிலர் சில மீற்றர் தூரத்தில் விழுந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கிய அந்த பாலமானது எஸ்பூ நகரில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பாதசாரி பாலம் என கூறப்படுகிறது.
பகல் சுமார் 9.30 மணியளவில் அந்த பாலம் விபத்தில் சிக்கியுள்ளது. அப்பகுதியில் கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையில், பாதசாரிகளுக்காக தற்காலிகமாக உருவாக்கப்பட்ட பாலம் அது என கூறியுள்ளனர்.
இருப்பினும், சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்புடைய பாடசாலைகளில் அவசர உதவி ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.