அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பால் முதல் உயிரிழப்பு பதிவு
கொரோனாவின் உருமாற்றம் பெற்ற புதிய வகை ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதித்த நபர்களில் ஒருவர் முதன்முறையாக உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
போட்ஸ்வானா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது 89 நாடுகளுக்கும் கூடுதலாக பரவி உள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸானது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.
ஒரு சில நாடுகளில் ஒமைக்ரானால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவில் முதல் ஒமைக்ரான் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி டெக்சாஸ் மாகாண சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தியில், 50 வயது கொண்ட முன்பே கொரோனா பாதித்த நபர் ஒருவர் ஒமைக்ரான் பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த நபர் தடுப்பூசியும் செலுத்தி கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ள அதேவேளை உடல்நல பாதித்த நிலையிலும் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.