வலையில் சிக்கிய மீனால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன மீனவர்!
இந்தியாவின் ஒடிசாவில் வலையில் சிக்கிய மீனால், மீனவர் ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன சமபவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஒடிசா மாநிலம் திக்கா பகுதியில் மீனவர் ஒருவர் சக நண்பர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றபோது அவரது மீன் வலையில் 121 டெலியா போலா வகை மீன் சிக்கியது.
வலையில் சிக்கிய இந்த மீனின் மதிப்பு சுமார் ரூ. 2.8 கோடி என கூறப்படுகின்றது. ஒரு மீன் மட்டும் சராசரியாக 18 கிலோ எடையை கொண்டிருந்த நிலையில் ஒரு கிலோ மீன் ரூ.13 ஆயிரத்திற்கு விலை போய் உள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஓடிசாவின் ராஜ் நகர் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் வலையில் அரிய வகையான டெலியா போலா மீன் சிக்கியது.
அப்பொழுது கிலோ ரூ10 ஆயிரத்திற்கு விற்பனையானது. இந்த டெலியா போலா ரக மீனை அப்பகுதி மக்கள் மயூரி மீன் என அழைக்கிறார்கள்.
டெலியா போலா வகை மீன் மீனின் வயற்றில் உள்ள சில பொருட்கள் மருத்துவ துறையில் சில அரிய நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனால் தான் இந்த மீனை பல மருத்துவ நிறுவனங்கள் நீயா நானா என்று போட்டி போட்டு வாங்கி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

