கனடாவில் காணாமல் போன பாகிஸ்தான் விமான பணியாளர்
பாகிஸ்தான் விமான பணியாளர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
றொரன்டோவில் தரையிறங்கிய விமானமொன்றில் கடமையாற்றிய விமானப் பணியாளரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
விமானம் தரையிறங்கி சில நாட்களில் குறித்த நபரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றின் பணியாளரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பீ.கே.781 என்னும் விமானத்தில் பணியாற்றிய இஜாஸ் ஷா என்ற நபரையே இவ்வாற காணவில்லை என விமான சேவை நிறுவனத்தின் பொது முகாமையாளர் அப்துல்லஹ கான் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை குறித்த விமானம் பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கனேடிய அரசாங்கத்திற்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் காணாமல் போன விடயம் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.